மூலிகைகள்
நாய் வேளை மருத்துவ பயன்கள்
நாய் வேளை மூலிகை கூட்டிலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் உடைய சிறு செடி இனம். இது பிசுபிசுப்பான தன்மை கொண்டது. தமிழகமெங்கும் தரிசுகளிலும் வயல்வெளிகளிலும் தானே வளர்கிறது. இதன் விதை நாய்கடுகு எனப்படும்.
வாத முடற்கடுப்பு வன்சூலை காதிரைச்ச
லோதமிகு பீநசமு மோடுங்காண் – போதறிந்து
காய்வேளைக் காயும்விழிக் காரிகையே ! வையமதில்
நாய்வேளை யுண்டு நவில்
குணம்
நாய்வேளை விதை குடல் வாய்வு அகற்றியாகவும், நுண்புழுக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இலை நாடியை சமன்படுத்தியக்காவும், கட்டி உடைக்கும் மருந்தாகவும் பயன்படும்.
நாய் வேளை மருத்துவ பயன்கள்
- நாய்வேளை இலையை பிற கீரைகளுடன் சமைத்து சாப்பிட வாய்வு அகலும், பசியை அதிகப்படுத்தும். பெண்களுக்கு உதிரச்சிக்கலை ஒழுங்கு படுத்தும்.
- நாய்வேளை விதையை துவையல் செய்து சாப்பிட வாதத்தை நீக்கும்.
- நாய்வேளை கீரையை அரைத்து கட்டிகளுக்கு வைத்து கட்ட தோல்சிவந்து கட்டி உடையும்.
- இதன் சாற்றை காதுகளில் 2 துளி விட்டு பஞ்சை அடைத்து வைக்க காது வலி தீரும்.