உணவே மருந்து

கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்கும் தோல் நீக்காத உளுந்து வடை

தேவையான பொருள்கள்

  • தோல் நீக்காத கருப்பு உளுந்து – 100 கிராம்
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகு – சிறிதளவு
  • சீரகம் – சிறிதளவு
  • அரிசி – சிறிதளவு
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து உளுந்தை தோல் நீக்காமல் அரைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து நல்லெண்ணையில் வடையாக தட்டி எடுக்கவும்.

பயன்கள்

  • இது கருமுட்டை வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • எலும்புகளும், நரம்புகளும் உறுதியாக இருக்க உதவுகிறது.
  • உளுந்து தோலில் கால்சியமும், பாஸ்பரசும் சம அளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
  • சிறு நீர் சார்ந்த நோய்களை நீக்குகிறது.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.
  • தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + sixteen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!