தும்பைபூவின் மருத்துவ பயன்கள்
எதிரடுக்கில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையும் நாற்கோண வடிவிலமைந்த தண்டுகளையும் பாத வடிவிலான தேன் நிறைந்த வெந்நிற சிறு மலர்கையும் உடைய சிறு செடி. மழை காலத்தில் எல்லா இடங்களிலும் காணலாம். ஈரப்பதமுள்ள எல்லா பருவத்திலும் தழைத்திருக்கும்.
தாகங் கடிதொழியுஞ் சந்நிபா தங்களறு
மாகத் தனில்வருநோ யண்டுமோ – மாகந்த
வம்பைப்பீ றுங்குயத்து மாதே நின் செங்கரத் தாற்
ரூம்பைப்பூ தன்னைத் தொடு
பயன்கள்
தும்பைச்சாறு 1மிலி தேனில் கலந்து கொடுத்து கொட்டு வாயில் இலையை அரைத்துக் கட்டினால் தேள் நஞ்சு இறங்கும். கடுப்பு நீங்கும்.
இலையை அரைத்துத் தடவி குளிக்க நமைச்சல், சொறி சிரங்கு தீரும்.
தும்பையிலை, உத்தாமணி இலை சம அளவு அரைத்து சுண்டக்காய் அளவு பாலுடன் கலந்து சாப்பிட்டு புளி, காரம் நீக்க உதிர்ச்சிக்கல், தாமதித்த மாதவிடாய் நீங்கும்.
தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.
சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.
கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமடையும்.