மூலிகைகள்
திராட்சை பழத்தின் நன்மைகள்
ஊட்ட ச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று, இதில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது. திராட்சைகளில் கருப்பு, பச்சை போன்றவை பரவலாக காணப்படுகிறது. திராட்சை நமக்கு புத்துணர்வை தருவதால் இரவில் இதை சாப்பிட்டால் தூக்கமின்மை ஏற்படும்.
பயன்கள்
- இது உடலில் உள்ள பித்தத்தை நீக்கும் . இரத்தை தூய்மையாக்குகிறது. நரம்புகள், இதயம், கல்லீரல், மூளை வலுப்பெறுகிறது. உடல் வறட்சியை நீக்குகிறது.
- தொடர்ந்து திராச்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் நீரத் தாரை எரிச்சல், சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்றவை உடனே குணமாகும். பயணம் செய்யும் போது இதை சாப்பிடுவதால் உஷ்ணம் குறைந்து அசதி நீங்கும். நீர் தாகம், நாவறட்சி ஏற்படாது.
- ரத்த சோகையை போக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.
- கருப்பு திராட்சை பழச்சாறு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான கொழுப்பு குறையும்.
- பசி ஏற்படாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிடவேண்டும், அது பசியை தூண்டி விடும், குடல் சம்பந்தமான கோளாறுகளை நீக்குகிறது.
- குழந்தைகளுக்கு பல் முளைக்கும் நேரத்தில் மலக்கட்டு மற்றும் காய்ச்சல் ஏற்படும். அவர்களுக்கு திராட்சையை பழச்சாறு ஒரு கரண்டி வீதம் கொடுக்க தீரும்.
குறிப்பு : காச நோய் மற்றும் வாத நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.