தினமும் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?
நம்மில் பலருக்கும் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா என சந்தேகம் எழுவது உண்டு. உண்மையில் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தேவையற்றது. ஆனால் தினமும் தலை குளிப்பது நம் கூந்தலுக்கு மிக அவசியமாகும். ஏனென்றால் நம் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாசு கூந்தலில் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். ஆகவே தினமும் தலைக்கு குளிப்பது நல்லது.
மூலிகை எண்ணெய்
கூந்தல் வறட்சியில் இருந்து விடுபட இரவில் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய் தலைக்கு தடவி காலையில் குளித்து வரலாம். மூலிகை எண்ணெய் பயன்படுத்துவதால் கூந்தல் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாகும். இது தலைமுடி பிரச்சினை அனைத்தில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.
சாதாரணமாக நல்லெண்ணையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தலைக்கும் உடலுக்கும் தேய்த்து குளிக்கலாம் அது உடலில் உள்ள வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. விளக்கெண்ணெய் சேர்ப்பதால் தலைக்கு பொடுகு வராமல் தடுக்கும்.
எண்ணெய் குளியல்
நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலை தவறாமல் கடைபிடித்து வந்தார்கள். எண்ணெய் குளியல் என்பது கூந்தலுக்கு மட்டும் அல்ல நம் உடல் ஆரோக்கியத்திற்கும் சேர்த்துதான்.
வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது மிக அவசியம் அது நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம் போன்றவற்றுக்கும் மிக நல்லது. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம் உடலில் உள்ள கண்ணுக்கு தெரியாத துவாரங்கள் மூலம் உள்ளே செல்லும் அதன் மூலம் உடல் களைப்பு நீக்கும், உடலை சுறுசுப்பாக இயங்க வைக்கும்.