தலைமுடி வளர்ச்சிக்கேற்ற உணவு வகைகள்
இன்றைய நாகரீக உலகில் ஒப்பனைக்கலை மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. இதில் நாகரீகமும் மக்களின் ரசனைக்கேற்ப பயன்பட்டு வருவதை பார்க்கிறோம். இதன் அடிப்படையாக இருப்பது முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியமே, இதை நாம் நன்கு பராமரித்து வளமாக வைத்து கொண்டாலே இயற்கை அழகு இயல்பாகவே ஒவ்வொருக்கும் அமையும்.
உணவு வகைகள்
உணவில் புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, மாமிசம், முளைக்கட்டியத்தானியன்கள், பருப்பு வகைகள் போன்றவை முடியின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானவை.
முடி பளபளப்பாக
முடிக்கு பளபளப்பை கொடுப்பது கொழுப்புச்சத்து, மீன், மாமிசம், பால், தாவர எண்ணெய்களில் அதிகமாக இருக்கிறது.
முடி வளர்ச்சி
இதற்கு இரும்புச்சத்து மிக அவசியமானது, இரும்புச்சத்தானது பனைவெல்லம், எள், கேழ்வரகு, பேரீட்சை, கீரை வகைகளில் போன்ற உணவுவகைகளில் அதிகம் காணப்படுகிறது.
இளநரை
இளநரைக்கு நிறமிச்சத்துக்கள் அதிகம் கொண்ட கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.