மூலிகைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தண்டுக்கீரை
பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன் தருவது கீரை வகைகள், பல வகை கீரைகள் நாம் பயன்படுத்தினாலும் தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை எல்லா பாகங்களுமே பயன்படுவது இதன் சிறப்பு. தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரகுடும்பத்தை சேர்ந்தது. இதில் 60 க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.
மருத்துவ பயன்கள்
- உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
- கால்சியம், இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் இருப்பதால் உடலை நோய் வராமல் தடுப்பதுடன், உடல் செயல்பாட்டை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
- தண்டுக்கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது.
- தண்டுக்கீரை இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.
- உடலை குளிர்ச்சியாக வைக்க தண்டுக்கீரை பயன்படுகிறது. இதனால் மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக திகழ்கிறது.