மூலிகைகள்
சுரைக்காய் மருத்துவ பயன்கள்
சுரைக்காய் வெப்பம் மிகுந்த நாடுகளில் இயல்பாகவே அதிகமாக காணப்படும். சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணிந்து வெப்பம் சார்ந்த நோய்கள் வராது. சிறுநீரை நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
வாதபித்தம் வாயருசி வன்பிலீ கஞ்சீத
மோதியிருந்து நோயுமுண்டா முள்ளனற்போ – மோதத்
திருப்பாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரைக்காயைத் தின்பவர்க்குச் சொல்
பயன்கள்
- இதனை சமைத்துண்ண தேகத்தின் அழலையாற்றும், தாகத்தை அடக்கும், சிறுநீரை அதிகப்படுத்தும்.
- சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.
- இரத்த சோகையை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
- மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். குடல் புண்ணை ஆற்றும்.
- உடல் எடையை குறைக்க சுரைக்காய் சிறந்த உணவாகும்.
- சுரைக்காயின் இலையை ஒரு பிடி எடுத்து சிறிது சிறிதாக அரிந்து 1 லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக காய்ச்சி பிசைந்து வடிகட்டி சாப்பிட நீரை அதிகமாக இறங்க செய்யும். வீக்கம் கரையும்.