சம்பங்கி மருத்துவ பயன்கள்
சம்பங்கி – சண்பகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆங்கிலப் பெயர் michelia champaca flower என்பதாகும். இதன் பூ, வேர் மருத்துவக்குணம் உடையது.
நல்ல மணம் உடையது.பெண்களுக்கு மிகவும் பிடித்த மலர்களில் இதுவும் ஒன்று. இது வீடுகளிலும் சாலையோரங்களிலும் காணப்படும். சம்பங்கி தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. பூக்கள் அதிகமாக பூக்கும்.
சம்பங்கி மர இலைகளுக்கும் துளிர்களுக்கும் கர்ப்பப் பையில் உள்ள எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் சக்தி இதற்குண்டு. ஆறாத புண்களை இதன் இலையை நெருப்பில் வதக்கி கட்டினால் புண் ஆறிவிடும். இம்மரத்தின் பட்டையை கஷாயம் வைத்து சாப்பிட்டால் ஜீரம் குணமாகும்.
சம்பகப்பூ கஷாயம் ஆசீரணம், மலக்கட்டு முதலியவைகளையும் நீக்கும். இக் கஷாயம் ‘கனேரியா’ என்ற வியாதிக்கு கொடுக்க விரைவில் குணமாகும்.
சம்பங்கி பூவை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து அரைத்து தலைவலிக்கு தடவினால் தலைவலி தீரும். கண்களை சுற்றி பற்றுபோட கண் எரிச்சல் – கண்களில் நீர்வடிதல் – கண் சிவந்திருத்தல் குணமாகும். சம்பங்கி பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 500 மில்லி தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி தினம் இரண்டு வேலை சாப்பிட வாந்தி வயிற்று வலி குணமாகும்.
இதன் பட்டையை நன்றாக உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு – 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும். இரைப்பையின் உண்டாகும் புண்களை(அல்சர்) ஆற்றும். இதன் பட்டையை தயிர் விட்டு அரைத்துக் கட்டிகளுக்கு போட கரைந்து போய்விடும். சீழ் கொண்டிருந்தால் உடைத்து சீழை வெளியேற்றி விடும்.
பிரசவமான பெண்களுக்கு உண்டாகும் ஜன்னி அலறல் முதலியவை போக இதன் இலைகளை பசு நெய்யில் வதக்கி தலையில் கட்ட உடனே சரியாகும்