மூலிகைகள்

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கேழ்வரகு

கேழ்வரகு இந்தியர்களின் மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாகும். உணவு செரிமானத்திற்கும், உடல் எடைகுறைவுக்கும் ஏற்றது கேழ்வரகு ஆகும். இதன் தாயகம் எத்தியோப்பியா, வறண்ட நிலங்களிலும் மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது.

பயன்கள்

  • இதில் உடலுக்கு தேவையான கார்போ ஹைட்ரேட் அதிகமாக உள்ளது, மேலும் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை உள்ளதால் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கிறது.
  • ஒருவர் 100 கிராம் கேழ்வரகு சாப்பிட்டால் 336 கலோரிகள் அளவுக்கு உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. மிக குறைந்த அளவு கொழுப்புகள் கொண்டது.
  • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கேழ்வரகு உணவுகள் உதவுகிறது.
  • கேழ்வரகை பொடியாக அரைத்து பால் மற்றும் தண்ணீருடன் சேர்த்து சத்து பானமாக அருந்தலாம்.
  • கேழ்வரகு மாவை களியாக கிளறி சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேழ்வரகுடன் கொஞ்சம் பால் சேர்த்து ரொட்டியாகவோ அல்லது தோசையாகவோ சாப்பிட அதிக நன்மையைத்தரும்.
  • இது உடல் உஷ்ணத்தை கொடுப்பதால் மூலநோய் உள்ளவர்கள் கேழ்வரகு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!