மூலிகைகள்
உடல் சூட்டை நீக்கி, மூலநோயை குணப்படுத்தும் கருணைக்கிழங்கு
உடல் சூட்டை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதை வாரம் ஒருமுறை சமைத்துண்ண உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களை வராமல் தடுக்கிறது. கருணைக்கிழங்கு இந்த இனத்தில் காருங்கருணை, காறாக்கருணை, காட்டுக்கருணை என மூன்று வகைகள் உண்டு.
மேகமணு காதுவெகுதீ பனமாகுந்
தேகமதில் மூலமூளை சேராவே – போகாச்
சுரதோஷம் போங்கரப்பான் றோன்றும் வனத்திற்
பரவுகரு ணைக்கிழங்காற் பார்
காட்டுக்கருணைக் கிழங்கு
இது மூலநோயை குணப்படுத்தும், இதை சித்தமருத்துவத்தில் மூல நோய் லேகியத்திற்காக பயன்படுத்துவது வழக்கம்.
காறாக்கருணைக் கிழங்கு
காறாக்கருணைக் கிழங்கினால் வாதநோய், இரத்த மூலம், அக்னி மந்தம் ஆகிய நோய்கள் தீரும்.
காருங்கருணைக் கிழங்கு
இந்தவகை கிழங்கினால் கரப்பான், பொடிச்சிரங்கு, சொறி, உட்கிரந்தி, கபக்கோழை, நமைச்சல் ஆகியவை உண்டாகும். மூலரோகத்தை நீக்கும்.