குடிநீர்சித்த மருத்துவம்
கபசுர குடிநீர்
கபசுர குடிநீர் பல்வேறு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் இச்சூரணம் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து வைரஸ் கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. நோய் வரும் முன் காப்பதற்கும், சாதாரண கிருமிகளினால் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு தடுப்பு மருந்தாக கபசுர குடிநீர் பயன்படுத்தலாம்.
மூலிகைகள்
- சுக்கு
- மிளகு
- திப்பிலி
- கிராம்பு
- முள்ளிவேர்
- அக்ரகாரம்
- சிறுகாஞ் சொரிவேர்
- ஆடாதொடை
- கடுக்காய்த்தோல்
- கோஸ்டம்
- சீந்தில் தண்டு
- சிறுதேக்கு
- நிலவேம்பு
- வட்டத்திருப்பி வேர்
- கோரைக்கிழங்கு
- சிற்றரத்தை
- கற்பூரவள்ளி இலை
- அதிமதுரம்
- தாளிசபத்திரி
பயன்படுத்தும் முறை
இந்த மூலிகைகள் அனைத்தும் சமஅளவு எடுத்து பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து 250 மிலி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 50 மிலி அளவாக வந்தவுடன் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்
அளவு
- 2 முதல் 5 வயது வரை – 5 மிலி
- 5 முதல் 8 வயது வரை – 10 மிலி
- 8 முதல் 12 வயது வரை – 20 மிலி
- 12 முதல் 15 வயது வரை – 30 மிலி
- 15 வயதுக்கு மேல் – 50 மிலி
இம்மருந்தை கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்வது நன்று