மூலிகைகள்
ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட பப்பாளி பழம்
நீண்ட குழல் வடிவ காம்புகளில் பெரிய கைவடிவ இலைகளை உச்சியில் மட்டும் கொண்ட மென்மையான கட்டைகளையுடைய பாலுள்ள மரம், கிளைகள் அரிதாகப் காணப்பெறும். இதன் பூ வெண்ணிறமானது. காய் பச்சை நிறமாகயும், பழம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.பெரிய சதைக் கனியை உடையது. இதன் காயைச்சமைத்து சாப்பிடலாம். பழத்தில் ,உயிர்ச்சத்துக்கள் உள்ளன. தமிழ்நாடெங்கும் பரவலாக வளர்க்கப்படுகிறது. பால், காய், பழம், இலை ஆகியவை மருத்துவ பயனுடையது.
பயன்கள்
- சிலரது தேகத்தில் ஒருவகைப் படை தோன்றும். இது நாட்கள் ஆக ஆக படர ஆரம்பிக்கும். சில வேளைகளில் உடல் முழுவதுமே இது படரக்கூடும். இதற்குப் பப்பாளி இலைச்சாறு நல்ல பயன் தரும். பப்பாளி இலையைத் தட்டி சாறுபிழிந்து படர்தாமரை மேல் பூசி வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். தினசரி காலை மாலை ஏழுநாட்கள் இவ்வாறு செய்து வந்தால் இந்நோய் குணமாகும்.
- வயிற்று கிருமிகளால் உண்டான வலி நீங்கும், தாய்ப்பால் பெருக்கும். உதிரச்சிக்கல் தீரும்.
- காயை சமைத்து உண்ண வயிற்று கிருமிகள் நீங்கும். தடித்த உடம்பு குறையும் , தாய்ப்பால் பெருக்கும். உதிர்ச்சிக்கல் தீரும்.
- பப்பாளி பாலை படிகாரத்துடன் கலந்து தடவ மண்டைக் கரப்பான், சொறி தீரும்.
- பப்பாளி பழத்தை உண்பதால் மூலம், வாயுத் தொல்லை நீங்கும்.
- பாலை மட்டும் தடவி வர கட்டி, வேர்க்குரு தீரும்.
- நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல், வீக்கம் குறையும். செரிப்பற்றால் பெருகும். குன்மம், ரணம் , அழற்சி, வயிற்றுப்பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்ப்பாதை அழற்சி ஆகியவை தீரும்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.