இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க
இன்றைய சூழ்நிலையில் இரத்தம் தொடர்பான பிரச்சினைகளை அதிகமாக சந்தித்து வருகிறோம். நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நம் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இருந்துச்சத்துக்கள் அதிகம் இருந்தால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலே இரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம் இதற்கு இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாடே காரணம்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க
- அத்திப்பழம் – 1/4 கிலோ
- கருப்பு பேரீச்சம்பழம் – 1/4 கிலோ
- உலர்ந்த கருப்பு திராட்சை – 1/4 கிலோ
- நெய் – 250 கிராம்
- தேன் – 1/2 லிட்டர்
அத்தியையும் பேரீச்சையையும் உலர் திராட்சை தனிதனியாக அரைத்து பின்பு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அத்திப்பழம், கருப்பு பேரீச்சம்பழம், உலர்ந்த கருப்பு திராட்சை இவற்றை தனித்தனியாக அரைத்து பிறகு ஒன்றாக கலந்துகொள்ளவும். பிறகு அதில் தேனை, நெய்யை கலந்து வைத்து கொள்ளவும். இதை தினமும் காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
கொத்தமல்லி
நாட்டு பசு நெய்யில் கொத்தமல்லி இலையை வதக்கி அரைத்து சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.
வல்லாரை
வல்லாரை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்னிக்கை அதிகரிக்கும்
மஞ்சள் கரிசலாங்கண்ணி
மஞ்சள் கரிசலாங்கண்ணி பவுடருடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பவுடருடன் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட இரத்த விருத்தி ஆகும்.
சீதா பழம்
இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள சீதா பழம் இரத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கிறது. வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலை தாக்கும் பல வகை தொற்றுகளில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது.
மாதுளம் பழம்
மாதுளையில் இரும்புச் சத்து அதிக அளவில் காணப்படுவதால் இதை அன்றாடம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். காலை உணவுக்கு பின் மாதுளம்பழத்தில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தத்தை அதிகரிக்கும் , உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.
ஊறவைத்த கருப்பு உலர் திராட்சை
கருப்பு உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் நீருடன் திராட்சையை சாப்பிட்டுவர இரத்த சோகையை நீக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் இரும்புச் சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ் மற்றும் கால்ஷீயம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம் அல்லது பொடியாக செய்து பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.