இயற்கை முறையில் பற்பொடி செய்முறை
பல் போனால் சொல் போச்சு என்ற ஒரு சொல் உள்ளது. நாம் தெளிவாக பேச பற்களின் உதவி தேவை படுகிறது. இயற்கையாகவே அனைவருக்கும் பல் சிறப்பாகவே அமைகிறது. ஆனால் நாம் சரியாக பராமரிக்காததால் பற்களில் சொத்தை, ஈறு வீக்கம், ரத்த கசிவு, வாய் நாற்றம், பற்களில் காரை படித்தால், பல் சிதைவு போன்ற நோய்கள் உண்டாகின்றன.
ஆல், வேல், நாயுருவி, வேம்பு, கடுக்காய் போன்ற மூலிகைகள் பல்லுக்கு பாதுகாப்பு தருபவை. இப்பொழுது வரும் பற்பசைகள் ஒரு புதிய தூய்மையான உணர்வை மட்டுமே தருகிறது. ஆனால் உண்மையாகவே தூய்மை செய்யப்படுவதில்லை. எந்தளவுக்கு பற்பசைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூடிக்கொண்டே போகிறதோ அந்தளவுக்கு பல் மருத்துவமனைகளும் அதிகரிக்கத்தான் செய்கிறது.
எனவே பற்பசைகளை விட இயற்கை மூலிகை கலந்த மூலிகை பொடிகளை உபயோகிப்பது சிறந்தது. இயற்கை மூலிகை பற்பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான மூலிகைகள்
- கடுக்காய்தோல் – 15 கிராம்
- மாசிக்காய் – 20 கிராம்
- நெல்லிவற்றல் பொடி – 15 கிராம்
- தான்றிக்காய்தோல் – 15 கிராம்
- சுக்கு – 10 கிராம்
- மிளகு – 10 கிராம்
- திப்பிலி – 10 கிராம்
- ஏலக்காய் – 10 கிராம்
- கிராம்பு – 10 கிராம்
- இலவங்கப்பட்டை – 10 கிராம்
- நெற்பதற் சாம்பல் – 120 கிராம்
நெற்பதற் சாம்பலை தவிர மற்ற மூலிகை ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து சலித்து வைத்துக்கொண்டு பின் இடித்து சலித்துள்ள நெற்பதற் சாம்பலை சேர்த்து ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு பல் தேய்த்து வர பல் வியாதிகள் அனைத்தும் குணமாகும். எந்த ஒரு பல் வியாதிகளும் எதிர்காலத்தில் வராது.