ஆடுதின்னாப்பாளை மருத்துவ பயன்கள்
ஆடு தின்னாப்பாளையின் ஆங்கிலப் பெயர் ‘ Aristolochia Bracteata ‘ என்பதாகும். ஆடு தின்னாப்பாளை – ஆடு தீண்டாப்பாளை – அம்புடம் – அஞ்சலி – வாழ்துப்பூ – புழுக் கொல்லி – மறியுணாமூலி – பங்கம் பாளை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பூண்டு இனத்தச் சேர்த்து. நன்செய் நிலங்களிலும் – கால் வாய் ஓரங்களிலும் – சாலை ஓரங்களிலும் காணப்படும். இலைகள் மாற்று அடுக்கில் – முட்டை வடிவில் – சாம்பல் நிறத்தைக் கொண்டது. தரையோடு படர்ந்து வளரும். முதிர்ந்த நிலையில் காய்கள் வெடித்துச் சிதறும்.
ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி
நீடுகருங் குஷ்டம் நிறைகரப்பான் ஆடிடச்செய்
யெண்பது வாய்வு மிகில்குஷ்ட முந்தீருந்
திண்பெருநற் றதுவுமாய் செப்பு
மருத்துவ பயன்கள்
ஆடுதீண்டாப் பாளை இலைகள் கொஞ்சம் எடுத்து 1/4 லிட்டர் சுடு தண்ணீரில் 2 மணி நேரம் ஊறப் போட்டு 2 மணி நேரம் கழித்து வடி கட்டி 50 மில்லி அளவு தினந்தோறும் காலையில் மட்டும் குடித்து வந்தால் பூச்சிக் கடி – கருமை நிறப்டை – பன்றி தோல் போன்ற படை – கிரந்திவிஷம் – கனைச் சூடு – குடலில் தொல்லைப் படுத்தும் புழுக்கல் – தலைமுடி உதிர்தல் – சிலந்தி கடி – வாதநோந்கள் குணமாகும்.
இதன் சமூலத்துடன் கருங்குருவை நெல்லும் சேர்த்து அவித்து – அவல் இடித்து தினமும் ஒரு வேலை 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் சொறி – சிரங்கு – குஷ்டம் – வண்டு கடி – பூரான்கடி – செய்யான் கடி – அரணைக் கடி முதலிய விஷங்கள் குணமாகும். அது வரையில் நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது. அப்போது மிளகை பால் விட்டு அரைத்து தேய்த்து குளித்து வர வேண்டும். வாரம் ஒரு முறை.
விதையை சூரணம் செய்து 5 கிராம் அளவு விளக்கெண்ணெயில் கொடுக்க நன்றாக பேதியாகும் இதனால் வயிற்றுவலி தீரும். சூதகக் தடையை நீக்கி மாத விலக்கைத் தூண்டும்.
வேர் சூரணம் 1 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனையை தீர்த்து சுகப் பிரசவத்தை உண்டாக்கும்.
இலையை காய வைத்து இடித்து சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயை குணப் படுத்தும்.
இதன் விதையை சுண்டக்காய் அளவு எடுத்து வெற்றிலையில் மடித்து மென்று தின்னக் கொடுத்தால் பாம்பு கடிபட்டவர்களின் விஷம் இறங்கி விடும்.