மூலிகைகள்
உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் அவரைக்காய்
அவரைக்காய் நீண்டு வளரும் கொடி இனமாகும். அவரைக்காய் தென்னிந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. அவரை காய், இலை ஆகியவை மருந்தாகப் பயன்படுகிறது. அவரைக்காய் மிகுந்த சுவையுடையது. இதை கறியாகவோ அல்லது குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். அவரையில் பல வகைகள் இருந்தாலும் கொடி அவரைத்தான் பொதுவான மருத்துவ குணமுடையது.
கங்குலுண விற்குங் கறிக்கு முறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர் – தங்களுக்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காலுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி
மருத்துவ பயன்கள்
- அவரைப்பிஞ்சை சுற்று நரம்புகள் நீக்கி சிறு துண்டுகளாக்கி சாம்பாரில் அல்லது துவரம் பருப்புடன் கூட்டி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும்.
- அவரை இலையை சாறு பிழிந்து 1அல்லது 2 தேக்கரண்டி அளவு தயிர் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட கிராணி, மூலக்கடுப்பு, ஆசன எரிச்சல், சீதபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவை குணமாகும்.
- அவரை இலையை எடுத்து சாறு பிழிந்து ஒரு வெள்ளை துணியில் நனைத்து நெற்றி பொட்டாக வைத்திருக்க சிறிது நேரத்திலே தலைவலி குணமாகும்.
- அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நல்ல ஞாபக சக்தியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும்.
- அவரை இலைச்சாற்றுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிவர நமைச்சல், எரிச்சல், வேர்க்குரு , சிரங்கு போன்றவை குணமாகும்.
- உடலில் ஏற்படும் காயங்கள், வீக்கங்களுக்கு அவரை இலைச்சாற்றுடன் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் கலந்து பூசி வர விரைவில் குணமடையும்.