மூலிகைகள்
அரசமரம் மருத்துவ பயன்கள்
அரசமரம் கூறிய இலைகளையுடைய பெருமரம் கிராமப்புறங்களில் ஏரி, குளங்களுக்கு அருகில் புனித மரமாக வளர்க்க படுகிறது.இதன் கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவ பயனுடையது.
அரசம்வேர் மேல்விரண மாற்றுமவ் வித்து
வெருவவருஞ் சுக்கில நோய் வீட்டுங் – குரல்வறளுந்
தாகமொழிக் குங்கொழுந்து தாதுதரும் வெப்பக்கற்றும்
வேகமுத்தோ சம்போக்கும் மெய்
அரசமரம் குணம்
அரசம்வேர்பட்டை சரும நோய்களையும், வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். கொழுந்து வெப்ப அகற்றியாகவும், தாகம் தணிப்பானாகவும். விதை காமம் பெருக்கியாகவும் பயன்படுகிறது.
அரசமரம் மருத்துவ பயன்கள்
- அரசம் சூரணத்தை பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும், பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் தீரும்.
- அரசங்கொழுந்தை அரைத்து புண்களுக்கு பற்று போட புண்கள் ஆறும்.
- அரசம்வேர்பட்டை 30கி 300 மிலி நீரில் போட்டு 100மிலி யாக காய்ச்சி அதில் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வெட்டைச்சூடு, சொறி, நீர் எரிச்சல், சிரங்கு ஆகியவை தீரும்.
- அரசம்பட்டையை நெருப்பில் கருக்கி தூள் செய்து தேங்காய் எண்ணையில் கலந்து சொறி புண்களுக்கு பூச குணமாகும்.
- அரசம்வேர்பட்டை தூள் 2 சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டி கொடுக்க விக்கல், தொண்டை கட்டு, குரல்வளை நோய் தீரும்.
- அரசம்விதை தூள் உயிர் அணுக்கள் பெருக்கியாகவும், ஆண் மலட்டை நீக்கும்.
- அரசங்கொழுந்தை அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.
- உலர்ந்த பழத்தை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு வெந்நீரில் போட்டு காலை, மாலை 20 நாட்கள் கொடுக்க சுவாச காசம் தீரும்.