மூலிகைகள்
அசீரணம், வயிற்று பொருமல் நீக்கும் சோம்பு
சோம்பு சமையலில் நறுமணத்திற்க்காக சேர்க்கப்படுகிறது. இதில் எண்ணற்ற மருத்துவ நன்மை உள்ளது. சோம்புவில் நோய் எதிர்ப்பு, தாது பொருட்கள் போன்றவை மிகுந்து காணப்படுகிறது.
யோனிநோய் குன்ம முரூட்சைமந் தம்பொருமல்
பேனமுறு காசம் பிலீ கமிரைப் – பீனவுரை
சேர்க்கின்ற வாதமும்போஞ் சீர்பெரிய சீரகத்தான்
மூக்குநோ யில்லை மொழி!
குணம்
பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பினால் வயிற்று வலி, சுரம், அசீரணம், வயிற்றுப்பிசம், நுரைத்த கப இருமல், அதி தும்மல் பீனிசம் இவைகள் நீங்கும்.
பயன்கள்
- இதை இடித்து சூரணம் செய்து ஒரு வேளைக்கு 5 கிராம் வீதம் சர்க்கரை சேர்த்து தினம் 3 வேளை கொடுக்க அசீரணம், வயிற்று பொருமல், வயிற்று வலி முதலியவற்றை நீக்கி மலத்தையும் போக்கும்.
- சோம்புவில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் இது உதவுகிறது.
- இதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்நீரை குடிக்க பித்தத்தை தணிக்கும், மேலும் உணவை செரிக்க வைக்கும்.’
- பசி ஏற்படாதவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டால் உடனே பசியை தூண்டும்.
- இது குழந்தைகளின் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, உப்புசம் ஆகியவற்றை நீக்குகிறது.