மூலிகைகள்
தூக்கமின்மையை போக்கும் கொத்தமல்லி
கொத்தமல்லி இலையை ரசம், சாம்பார்களில் அதிகமாக பயன்படுத்துவார்கள். விதையை சமையல் பொடி செய்ய பயன்படுத்துவார்கள். இதன் விதை, இலை, தண்டு, வேர் என எல்லாமே மருத்துவக்குணமுடையது. கொத்தமல்லி தலை சூட்டை தனித்து நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
கொத்துமல்லிக் கீரையுண்ணிற் கொரவரோ சகம்போம்
பித்தமெல்லாம் வேறுடனே யேகுங்காண் – சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீரும்
கச்சுமுலை மாதே நீ காண்
குணம்
கொத்தமல்லி கீரையால் அரோசகமும், பித்தசுரமும் நீங்கும். விந்து விருத்தியாகும்.
பயன்கள்
- கொத்தமல்லி கீரையை பருப்புடன் வேகவைத்து கடைந்து நெய் விட்டு அன்னத்துடன் சேர்த்து சாப்பிட தலை சூடு தணிந்து நல்ல தூக்கம் வரும்.
- கொத்தமல்லிக்கீரையுடன் உப்பு, புளி, காரம் சேர்த்து துவையலாக செய்து சாப்பிட பித்தத்தையும், வாய்க்கசப்பு, சாப்பாட்டின் மீது வெறுப்பு ஆகியவை நீக்கும்.
- இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் விந்து உற்பத்திக்கு உதவுகிறது, மனக்குழப்பதையும் நீக்கும்.
- வீக்கங்களுக்கு கொத்துமல்லியை விளக்கெண்ணெய் ஊற்றி வதக்கி கட்ட விரைவில் குணமடையும்.
- கொத்தமல்லி இலையை வாயில் நன்றாக மென்று சாப்பிட பல் ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் ஆகியவை நீங்கும்.