மூலிகைகள்
உழுந்தை உண்டால் மருந்தே தேவையில்லை
உழுந்தில் அதிகளவு ஊட்டச்சத்து உள்ளதால் தமிழர் உணவில் முக்கிய பங்கு வகுக்கிக்கிறது. உழுந்தை வைத்தே இட்லி, வடை, தோசை, போன்ற காலை உணவை நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்துள்ளனர். அதிகளவு ஊட்டச்சத்து இருப்பதால் பெண்கள் பருவம் அடையும் பொழுது உழுந்தை உணவாக கொடுக்கிறார்கள்.
செய்யவுழுந் திற்குச் சிலேஷ்மவணி லம்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீருங்காண் – மெய்யதனி
லென்புருக்கி தீரு மிடுப்புக் கதிபலமா
முன்பு விருத்தியுண்டா முன்
குணம்
நல்ல உழுந்திற்கு கபவாதம், மந்தம், இடுப்பு எலும்பிற்கு உறுதி, மிகு வீரியம் இவையுண்டாம். மனக்குழப்பமும், எலும்புறுக்கியும் நீங்கும்.
பயன்கள்
- உழுந்தை வறுத்து நன்றாக மாவு போல் அரைத்து பிறகு ஒருகடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்துமாவை கொட்டி சிறிது சர்க்கரை சேர்த்து களிபோல் கிளறி தினமும் காலையில் ஒரு வேளை சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமை பெறும், இடுப்புக்கு வலுவை கொடுக்கும். ஆனால் ஒருவருடைய சீரன சக்திக்கு ஏற்றவாறு மாவின் அளவை சரிபடுத்திக்கொள்ளவும்.
- உளுந்தை நல்லெண்ணையில் வடை செய்து சாப்பிட்டு வர எலும்புகளும், நரம்புகளும் நல்ல பலம் பெறும், பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி அடையும்.
- உழுந்து மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை நீக்குகிறது.
- உழுத்தம் பருப்பின் மாவை சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து அடை தட்டி அப்பம் போல் தீயாமல் சுட்டு அதன் மேற்பாகத்தை தலையில் படும்படி தாங்கக்கூடிய சூட்டில் வைத்து கட்டவும். இது போல் ஒன்றன் பின் ஒன்றாக வைத்து கட்டிவர சுரத்தினால் உண்டான மயக்கம், வாய்ப்பிதற்றல், சுயநினைவிழத்தல் ஆகியவை தீரும்.
- உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது, சிறுநீர் நோய்களையும் நீக்குகிறது.
- தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது, இடுப்பு எலும்பை உறுதியடைய உதவுகிறது.