பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்
காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனற்
கூசும்பி லீகங்கு தாங்குரநோய் – பேசிவையா
லென்னாங்கா ணிப்படிவ மேமமாஞ் செப்பலென்னைப்
பொன்னாங்க ணிக்கொடியைப் போற்று.
பொன்னாங்கண்ணி கொடுப்பை என்றும் அழைக்கப்படுகிறது. இது பூண்டு இனத்தைக் சேர்ந்தது. நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி என்று இரு வகைகள் உள்ளன. நாட்டுப் பொன்னாங்கண்ணி பச்சை நிறமுடையதாகவும் இலைகள் சிறியதாகவும் இருக்கும். சீமை பொன்னாங்கண்ணி சிவப்பு நிறமாகவும் இலைகள் தடித்தும் நீண்டதாக இருக்கும்.
தமிழ் நாட்டில் இயற்கையாகவே தண்ணீர் அதிகமாக பாயக்கூடிய இடங்களில் தானாகவே பயிராகின்றன. சிலர் பயிரும் செய்கின்றன.நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரையில் பொன் சத்து அதிகமாக உள்ளது. இதன் இலையை காலையில் 10-15 இலைகளை தண்ணீரில் அலசிவிட்டு வாயில் மென்று தின்று வர உடல் பொன்போல் பிரகாசிக்கும். நீண்ட நாட்கள் சாப்பிட்டுவர வேண்டும்.
பொன் + ஆம் + காண் + நீ = பொன்னாங்கண்ணி அதாவது இதை உண்டு வந்தால் உடல் பொன்னாகக் காண்பாய் என்று சித்தர்கள் கூறிவுள்ளனர். இக்கீரையுடன் துவரம் பருப்பு, சிறிது நெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உடல் சதை பிடிக்கும் , இக்கீரையுடன் துவரம் பருப்பு மிளகு சேர்த்து சாப்பிட்டு வர உடல் பருமன் மூன்று மாதங்களில் குறைந்து அழகான உடற்கட்டை பெறலாம்.
இதன் இலைச்சாறு ஒரு அவுன்சும் – வெள்ளாட்டுப்பால் ஒரு அவுன்சும் தினசரி அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர – உடற் சூடு தணியும் வெள்ளாட்டுப்பாலுக்கு பதில் பசும் பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
பொன்னாங்கண்ணி இலையை பசு நெய் விட்டு வதக்கிக் கண்கள் மீது வைத்து கட்ட கண் நோய்கள் குணமாகும். இக்கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து உண்டு வர மூல நோய் 3 மாதங்களில் முற்றிலும் நீங்கி விடும்.