சித்த மருத்துவம்தைலம்
தோல் நோய்களை நீக்கும் மூக்கிரட்டை தைலம்
தேவையான மூலிகைகள்
- மூக்கிரட்டை வேர்கிழங்கு
- சோற்றுக்கற்றாழை
- ஆவாரம்பூ
- மருதாணி
- நல்லெண்ணெய்
செய்முறை
மூக்கிரட்டை வேர்கிழங்கு, சோற்றுக்கற்றாழை, ஆவாரம்பூ, மருதாணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பிறகு நல்லெண்ணையுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி சூடு ஆறிய பிறகு பயன்படுத்தலாம்.
பயன்கள்
- இதை உடலில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து மிதமான சுடு நீரில் குளித்து வர அரிப்பு மற்றும் தோல்நோய்கள் அனைத்தும் தீரும்.
- இதை வாத கடுப்பு, முழங்கால் வலி ஆகியவற்றுக்கு தேய்த்து சூடான நீரில் ஒத்தடம் கொடுக்க விரைவில் குணமடையும்.