இளமையின் ரகசியம்
என்றும் இளமைக்கு நம் உடலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளவது என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது நம் உடலுக்கு நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்க்கு நம் முன்னோர்கள் காய கற்ப உணவுகள் என்று கூறுவார்கள். காயகல்ப முறை என்பது பொதுவாக நோய் நொடி அண்டாமல் உடலை திடமாக வைத்துக்குக்கொள்வது ஆகும்.
வாழ்வதற்காக உண் – உண்பதற்காக வாழாதே
உணவு முறைகள்
காலையில் அரசனை போல் சாப்பிட வேண்டும் இரவில் ஏழையைப் போல் சாப்பிட வேண்டும். இதை தவறாமல் பின்பற்றுவார்கள் ஜப்பானியர்கள்.ஜப்பானியர்கள் வயதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
தமிழ் மருத்துவம்
நம் முன்னோர்கள் இதைவிட சிறந்த முறைகளை நமக்கு தந்திருக்கிறார்கள். அதை பின்பற்றினாலே நமக்கு நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம். நம் சித்தர்கள் பல வருடங்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ்பவர்கள் பணம் பொருள் வைத்திருப்பவன் அல்ல, ஆரோக்கியமாக வாழ்பவனே.
மருத்துவ முறைகள்
- பொன்னாங்கண்ணி கீரையை மிளகு, உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி 48 நாட்கள் உண்டு வர பொன் போன்ற உடல் வளமும், கண்களில் ஒளியும் உண்டாகும்.
- நெல்லிக்காய்களை பசுவின் பாலில் வேகவைத்து நிழலில் உலர்த்தி இடித்து வைத்துக்கொண்டு தினமும் 2 தேக்கரண்டி 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் புத்துணர்ச்சி பெறும், இளமையான தோற்றம் உண்டாகும்.
- திரிபாலா சூரணம் 48 நாட்கள் சாப்பிட்டு வர என்றும் இளமை நிலைத்திருக்கும்.
- ஓரிதழ் தாமரை உடல் தேற்றியாகவும், இளமையோடு இருக்கவும் உதவுகிறது.
- என்றும் இளமைக்கு கடுக்காய் சிறந்த மூலிகையாகும்.