உணவே மருந்து
கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்கும் தோல் நீக்காத உளுந்து வடை
தேவையான பொருள்கள்
- தோல் நீக்காத கருப்பு உளுந்து – 100 கிராம்
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- பச்சை மிளகாய் – 3
- மிளகு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- அரிசி – சிறிதளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
உளுந்து மற்றும் அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து உளுந்தை தோல் நீக்காமல் அரைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து நல்லெண்ணையில் வடையாக தட்டி எடுக்கவும்.
பயன்கள்
- இது கருமுட்டை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- எலும்புகளும், நரம்புகளும் உறுதியாக இருக்க உதவுகிறது.
- உளுந்து தோலில் கால்சியமும், பாஸ்பரசும் சம அளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
- சிறு நீர் சார்ந்த நோய்களை நீக்குகிறது.
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.
- தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படுகிறது.