உணவே மருந்து
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மூலிகை சூப் செய்முறை
மனிதன் இயற்கையை விட்டு செயற்கைகளுக்கு மாறினான் . இயற்கை விட்டு செயற்கைக்கு மாறும்போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நோய் எதிப்பு சக்தி குறைந்து அதிக நோய் தாக்குதலுக்கு உண்டாகிறோம் எனவே இதுபோன்ற மூலிகைகள் அவ்வப்போது நாம் உணவில் செய்துக்கொள்வது மிகவும் நல்லது. நோய் எதிப்பு சக்தி அதிகரிக்க மூலிகை சூப் மிகவும் அவசியமானது. மூலிகை சூப் வீட்டில் தயாரித்து அனைவரும் சாப்பிடலாம்.
தேவையான மூலிகைகள் மற்றும் பொருட்கள்
- முடக்கற்றான் ஒரு கைப்பிடி அளவு
- முருங்கை கீரை ஒரு கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- தக்காளி 100 கிராம்
- சின்னவெங்காயம் 50 கிராம்
- மிளகு சிறிதளவு
- சீரகம் சிறிதளவு
- பூண்டு
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
செய்முறை
முடக்கற்றான், கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் இடித்து வைத்துக்கொண்டு பிறகு ஒரு மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பிறகு எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல வாசனை வந்த உடன் இறக்கி வடிகட்டி விடவேண்டும்.
பயன்கள்
- உடலை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.
- பித்தமயக்கம், கண் எரிச்சலை குணமாக்கும்.
- மலச்சிக்கலை போக்கும்.
- நரம்பு கோளாறுகளை குணமாகும்.
- மூலம், மேக வாயுப் பிடிப்பி குணமாகும்.