உடல் நலம்

கப நோய் (ஈஸினோபிலியா)

ஈஸினோபிலியா எனும் கப நோய்

ஈஸினோபிலியா எனும் கப நோய் இன்று அதிகமாக காணப்படுகிறது. இந்நோய் முற்றி – ஆஸ்துமா வருவதற்கு காரணமாகிறது. தும்மல் அதிகமாகும் போது மூக்கடைப்பு – தொண்டை கணத்தல், இழுப்பு – சுவையின்மை ஏற்படுகிறது.

சளி அதிகமாக உண்டாவதாலும் – வாத – பித்த – கபம் – அதிகமாவதாலும் – கசப்பு சுவை உணவில் குறைவதாலும் – கல்லீரல் செயல்பாடு குறைந்து விடுவதாலும் சுற்றுச்சூழல் சீர் கேட்டினாலும் ஒவ்வாமை உணவுகளை உட் கொள்வதாலும் இது ஏற்படுகிறது தயிர் – மோர் – போன்ற குளிர்ச்சியான பானங்களை தவிர்க்க வேண்டும் – போதை பொருள்கள் உட் கொள்ளுவது – புகையிலை போடுவது முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

மருந்துகள்

பெருஞ்சீரகம் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) 100 கிராம் வாங்கி வைத்துக்கொண்டு 10 கிராம் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை – மாலை சாப்பாட்டிற்கு பிறகு ( ஒரு டம்ளர் அளவு ) சாப்பிட்டு வரவும்.

தூதுவளை கையைத் துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தீரும்.

சதகுப்பை ( நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ) நன்றாக காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு சிறிதளவு சீன கற்கண்டு சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்து வர தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 6 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!