சித்த மருத்துவம்சூரணம்
கொத்தமல்லி சூரணம்
கொத்தமல்லி சூரணம் செரியாமை, வாந்தி, விக்கல், நெஞ்செரிவு, நெஞ்சு வலி, கண்ணில் நீர்வடிதல், பார்வை மந்தம், வலிப்பு, இடுப்பு வலி, கல்லடைப்பு ஆகிய அனைத்துக்கும் சிறந்த மருந்தாகும்.
தேவையானவை
- கொத்தமல்லி – 300 கிராம்
- கற்கண்டு – 600 கிராம்
- சீரகம் – 50 கிராம்
- அதிமதுரம் – 50 கிராம்
- கிராம்பு – 50 கிராம்
- கருஞ்சீரகம் – 50 கிராம்
- சன்னலவங்கப் பட்டை – 50 கிராம்
- சதகுப்பை – 50 கிராம்
செய்முறை
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் இளவருவலாக வறுத்து பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடியை கலந்து வைத்துக்கொள்ளவும் இதுவே கொத்தமல்லி சூரணம்.
சாப்பிட்டும் முறை
கொத்தமல்லி சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டுவரவும்.
பயன்கள்
- உடல் சூடு தணியும்.
- வயிற்றுக் கோளாறு, செரியாமை நீங்கும்.
- வாந்தி, தொடர்ச்சியான விக்கல், பெரும் ஏப்பம் நீங்கும்.
- நெஞ்சு சளி, நெஞ்செரிச்சல் குணமாகும்.
- கண்பார்வை கோளாறு நீங்கும்.
- உடல் வலி, உடல் சோர்வு நீங்கும்.
- கல்லடைப்பு குணமாகும்.
- மனதிற்க்கு புத்துணர்ச்சி தரும்.