சித்த மருத்துவம்தைலம்
சிறுகீரை தைலம்
சிறுகீரை தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வர கண் நோய்கள் அனைத்தும் தீரும்.
தேவையானவை
- சிறுகீரை சாறு – 1 லிட்டர்
- கரிசலாங்கண்ணி சாறு – 1 லிட்டர்
- பால் – 1 லிட்டர்
- நல்லெண்ணெய் – 1 லிட்டர்
- எலுமிச்சை சாறு – 1/2 லிட்டர்
- அதிமதுரம் – 2 கிராம்
- ஏலக்காய் – 2 கிராம்
- நெல்லிக்காய் வற்றல் – 2 கிராம்
- லவங்கம் – 2 கிராம்
- கோஷ்டம் – 2 கிராம்
- வெட்டிவேர் – 2 கிராம்
- விளாமிச்சை வேர் – 2 கிராம்
சிறுகீரை தைலம் செய்முறை
பாத்திரத்தில் சிறுகீரைச்சாறு, கரிசலாங்கண்ணி சாறு, பால், நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து ஊற்றி அதில் அதிமதுரம், ஏலக்காய், நெல்லி வற்றல், லவங்கம், கோஷ்டம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் இவற்றை இடித்து அதில் சேர்த்து கொதிக்க வைத்து பதமுற காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை
சிறுகீரை தைலம் தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளிக்கவும்.
பயன்கள்
கண் வறட்சி மற்றும் கண்நோய்கள் அனைத்தும் தீரும்.