குடிநீர்சித்த மருத்துவம்
நிலவேம்பு குடிநீர்
நிலவேம்பு குடிநீர் அனைத்து வகையான சுரங்களையும் போக்கும்.
தேவையான மூலிகைகள்
- நிலவேம்பு – 25 கிராம்
- கோரைக்கிழங்கு – 25 கிராம்
- சுக்கு – 25 கிராம்
- மிளகு – 25 கிராம்
- சந்தனத்தூள் – 20 கிராம்
- பேய்புடல் – 20 கிராம்
- வெட்டிவேர் – 15 கிராம்
- விளாமிச்சை வேர் – 15 கிராம்
செய்முறை
மேற்கண்ட மூலிகைகளை இடித்து அதில் 25 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 100 மி.லி யாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
50 மிலி வீதம் காலை, மாலை இருவேளை குடித்து வர குளிர் சுரம், பித்த சுரம் போன்ற அனைத்து விதமான காய்ச்சல் தீரும்.