குடிநீர்சித்த மருத்துவம்
கடுக்காய் குடிநீர்
கடுக்காய் கிழவனையும் குமரனாக்கும் என்று ஒரு சொல்லாடல் உண்டு. கடுக்காய் ஆண்மை பிரச்சினை, பல், குடல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்து. கடுக்காயை குடிநீராக செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை மற்றும் சாப்பிடும் முறை
கடுக்காயை உடைத்து கொட்டை பகுதியை நீக்கி பொடியாக்கி சலித்து வைத்துக்கொண்டு 15 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு 100மிலியாக சுண்டக்காய்ச்சி இரவு உணவுக்கு பின் பருகி வரவேண்டும்.
பயன்கள்
- ஆண்மை குறைவு நீங்கும்.
- இரைப்பையை பலப்படுத்தும்.
- இரத்தம் தூய்மை அடையும்.
- உடல் வெப்பத்தை தணிக்கும்.
- பல் உறுதியாகும். பற்களில் ஏற்படும் இரத்த கசிவு நீங்கும்.