குடிநீர்சித்த மருத்துவம்
திராட்சை குடிநீர்
திராட்சை குடிநீர் உடலுக்கு உறுதியை தருவதோடு வயிற்றுக்கோளாறு, மலக்கட்டு ஆகியவற்றை நீக்கும்.
தேவையானவை
- உலர்ந்த திராட்சை – 60 கிராம்
- ஏலக்காய் – 30 கிராம்
- சீரகம் – 2 கிராம்
- வால்மிளகு – 1 கிராம்
- ரோஜா இதழ்கள் – 2 கிராம்
- கீழாநெல்லி வேர் – 5 கிராம்
செய்முறை
இவற்றை அனைத்தையும் 4 லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு லிட்டராக காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
தினமும் 100 மிலி வீதம் காலை மாலை என சாப்பிட்டு வரவும்
பயன்கள்
- உடல் உறுதி பெறும்.
- வாயு, வயிற்றுக்கோளாறு குணமாகும்.
- மலச்சிக்கல் நீங்கும்.