எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்
முள்ளுள்ள சிறு மாற வகுப்பு, தமிழகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுவது. இலைu பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இதில் வைட்டமின்களும், சுண்ணாம்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும் அதிக அளவில் அடங்கியுள்ளன. எலுமிச்சை ஊறுகாய் சுவைக்காதவரே இல்லை எனலாம்.
நாம் உண்ணும் உணவில் எலுமிச்சம்பழத்தை சேர்த்துக்கொண்டால் பலவித நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். எலுமிச்சம்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்பு, புரதம், உப்பு, கொழுப்பு முதலான பல்வேறு உயிர்ச் சத்துகள் அடங்கியுள்ளன
தாகங் குநகநோய் தாழாச்சிலிபதநோய்
வேகங்கொ ளுன்மாதம் வீறுபித்தம் – மகண்ணோய்
கன்னனோய் வாந்தியும்போங் கட்டுவா தீத்தொழிலின்
மன்னெலுமிச் சங்கனியை வாழ்த்து.
குணம்
மலபந்தமுள்ள எலுமிச்சம்பழத்தால் தாகம், நகச்சுற்று, யானைக்கால், உன்மாதம், பித்தம், கண்ணோய், காதுவலி, வமனம் இவைகளை நீக்கும்.
மருத்துவ பயன்கள்
இலையை மோரில் ஊறவைத்து மோரை உணவில் பயன்படுத்தப் பித்தச்சூடு, வெட்டைச்சூடு தணியும்.
எலுமிச்சை பழச்சாறு 4 துளிகள் காதில் விட்டுவரக் காதுவலி குணமாகும்.
பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் 6 மாதம் தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.
எலுமிச்சை பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வர பித்தமயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.
எலுமிச்சம்பழத் தோலைத் தேய்த்து குளித்தால் சருமம் மிருதுவாகி மெருகேறும். தோல் நோய்கள் வராது.
நகச்சுற்றுக்கு விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.
உடல் சூடு தணிக்கவும் பசித்தூண்டியாகவும் பயன்படும்.