மூலிகைகள்
வால் மிளகு மருத்துவ பயன்கள்
வால் மிளகு சிறுநீர் பையில் ஏற்படும் நோய்களை நீக்கும். வால் மிளகு சூரணம் செய்து பயன்படுத்தப்படுகிறது. மேலும் இஞ்சி லேகியம் போன்ற முக்கியமான சித்த மருந்துகளில் பயன்படுத்துகிறது.
வாதபித்த வையம் வயிற்று வலிதாகஞ்
சீதம் பல்நோய் சிதையுங்காண் – போத
வதிதீ பனமா மணங்காசே நாளுந்
துதிவான் மிளகருந்தச் சொல்
குணம்
வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம் இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும்.
சாப்பிடும் அளவு
வால்மிளகு சூரணத்தை வேளைக்கு 1/2 கிராம் முதல் 1 கிராம்
தேனில் கலந்து சாப்பிட
- சிறுநீர் பையில் உண்டான வலி தீரும்.
- பற்களில் உண்டான வீக்கம், பற்களில் ஏற்படும் இரத்த கசிவு, பல் கூச்சம் ஆகியவை தீரும்.
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல், மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வலியை போக்கும்.
- வாயு மற்றும் கபக்கட்டு இவைகளை நீக்கும்.
வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட
தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, தொண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும்.
இளநீரில் போட்டு சாப்பிட
நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும். வாயுவை குணப்படுத்தும்.