பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா ?
நம் உடலில் அசுத்த இரத்தத்தை கொண்டு செல்லும் சிறை ரத்த குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன இந்த வால்வுகள் தான் சிரை குழாய்களில் இரத்தம் தேவையில்லாமல் தடுக்கின்றன.
ஆனால் நமது உடலின் அமைப்பின்படி ஆசனவாயில் இருந்து மலக்குடலுக்கு செல்லும் சிரை குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இல்லை. இதனால் புவி ஈர்ப்பு விசை காரணமாக சாதாரணமாகவே அங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த இரத்த அழுத்தம் சிறிது அதிகமானால் கூட அவற்றில் இரத்தம் தேங்கி சிறிய பலூன் மாதிரி வீங்கிடும், இந்த இரத்த குழாய் வீக்கத்தைதான் ‘ மூல நோய் ‘ என்கிறோம்.
மூல நோய் வருவதற்கான காரணம்
இதற்கு முக்கிய காரணம் மலச்சிக்கல், நம் உடலில் இருந்து மலத்தை வெளியேற்ற முக்கி அழுத்தத்தை கொடுப்பதனால் ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும்.
ஆண்களிடம் காணப்படும் சிறுநீர் குழாய் அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூல நோய் உண்டாகும்.
வெளி மூலம், உள் மூலம்
வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகையான மூல நோய்கள் உள்ளன. வெளி மூலம் வெளிப்புறத்திதில் தோன்றுவது. ஆசனவாயின் உள்ளே தோன்றுவது உள் மூலம். மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதனை சுலபமாக சரிசெய்துவிடலாம்.
பன்றிக்கறி மூல நோயை குணப்படுத்துமா?
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகிறது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மை அல்ல. 100 கிராம் பன்றிக் கறியில் 26 கிராம் புரதமும் 18 கிராம் கொழுப்பும் உள்ளன.
வைட்டமின் பி12, பி6, இரும்பு, துத்தநாகம், செலினியம், நியாசின் போன்ற வைட்டமிகளும் தாது சத்துக்களும் நிறைந்துள்ளன. மூல நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து தேவைப்படும்.
ஆனால் இதில் நார்ச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் இல்லை. ஆகவே இதில் மூல நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை.
மூல நோய்க்கு சித்த மருந்து
தேற்றான் கொட்டை லேகியம், கருணைக்கிழங்கு லேகியம் ஆகியவை மூல நோய்க்கு சிறந்த சித்த மருத்துவமாகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிகப்படியான காரம், உப்பு, புளி மசாலா உணவுகள்.
மூல நோய்க்கான உணவு முறைகள்
கீரை வகைகளில் தாளிக்கீரை, வெந்தயக்கீரை, பாலக்கீரை காய்கறிகளில் கருணைக்கிழங்கு, பாகல்காய், சுண்டக்காய், கோவைக்காய்.