உடல் வெப்பம் தணிக்கும் பூசணிக்காய்
சுணையுடைய அகன்ற இலைகளையும் பற்றுக் கம்பிகளையும் வெளிர் மஞ்சள்நிற காய்களையும் உடைய ஏறுகொடியினம். தமிழகமெங்கும் பயிரிடப் படுகிறது. காயே மருத்துவப் பயனுடையது. குளிர்ச்சி உண்டாக்கும் தன்மையுடையது.
வீடுகளில் நடைபெறும் விசேஷ நாட்களின் போது தெருக்களில் திருஷ்டிக்காக உடைக்கப்படுவது பூசணிக்காயாகும்.
பயன்கள்
பூசணிக்காயை குடைந்து அதனுள் செம்பருத்தி பூவை போட்டு ஊற வைத்து எடுத்த சாற்றுடன் சர்க்கரை சேர்த்து உட்கொள்ள சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
பூசணிக்காயை கறியாக சமைத்து உண்டால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மனக்கலக்கம், வெறி போன்றவை நீங்கும். சிறுநீர் பெருகும். சிறுநீர் எரிச்சலும் தணியும்.
பூசணிக்காய் விதைகளை நீக்கி, அதனை வேக வைத்து புண்களின் மீது வைத்து கட்ட, அந்த இடத்தில் துர்நாற்றத் தன்மை நீங்கி சதை வளரும்.
பூசணிச்சாற்றை பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும், பூசணிக்ச்சாற்றுக்கு உடல் உள்உறுப்புகளின் ரணங்களை ஆற்றும் தன்மையும் உண்டு.
காய்த்துருவால் 5 கிலோ, 1 படி அவல், 30 கிராம் மிளகாய்த்தூள்,10 பச்சைமிளகாய், பெருங்காயம் 15 கிராம், வேக வைத்து கொட்டைப்பாக்கு அளவாய் உருட்டிக் காய வைத்து நல்லெண்ணையில் வறுத்து சாப்பிட சூடு, பித்தம் நீங்கி உடலுக்கு பலமும், அழகும், சதைப்பற்றும் உண்டாகும்.
தெரியமலே உடலில் கலந்து விட்ட நஞ்சின் தன்மையை அழிக்கும் சக்தியும் பூசணி சாற்றுக்கு உண்டு.
3 மாதம் தொடர்ந்து சமைத்து சாப்பிட இழைத்த உடம்பு பெருக்கும், ரச வேக்காடு, மருந்து வீறு தனியும்.
பூசணி சதையை உலர்த்தி அதனுடன் சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டுடன் சேர்த்து உட்கொள்ள கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.