சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய், கைக்குத்தல் அரிசி நல்லதா?
ஒவ்வொரு நாளும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிட்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று சாப்பிடுவதுண்டு. கைக்குத்தல் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என சொல்லுவதுண்டு அதை பற்றி பார்ப்போம்.
பாகற்காய்
பாகற்காய் இதில் அல்கலாயிட்ஸ் என்ற வேதிப்பொருள் இருப்பதால் சர்க்கரை குறைய வாய்ப்பு உள்ளது. பாகற்காயில் உள்ள நார்சத்து சர்க்கரை அளவை குறைக்கிறது . பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு. ஆனாலும் பாகற்காயை அதிகமாக சாப்பிடக்கூடாது.
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் இரத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்காது. இதில் நார்சத்து இருப்பதால் உடனடியாக இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்காது. ஆனாலும் கைக்குத்தல் அரிசியாக இருந்தாலும் அளவோடு உண்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு எது நல்ல உணவு
பொதுவாக சைவ உணவில் தான் நார்ச்சத்துக்கள் உள்ளது. கொழுப்பும் குறைவாக இருக்கும். தினமும் சரிவிகித உணவு, உடற்பயிற்சி என இருந்தால் சர்க்கரை நோயை நெருங்கவிடாமல் தடுக்கலாம்.
நீரிழிவு நோயும் தீர்வும்
சர்க்கரை வியாதிக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரிழிவு, மதுமேகம், அதிமூத்திரம் என பெயர் சூட்டியுள்ளனர். குளுகோஸின் அளவு இரத்தித்தில் அதிகளவு அதிகரித்திருப்பது இதன் தன்மையாகும். சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வு சொல்லப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சை முறைகள்