உடல் நலம்

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மூலிகைகள்

நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டால் நோய்கள் நம்மை தாக்காமல் நம் உடலை பாதுகாத்து கொள்ளமுடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மூலிகைகள் பற்றி பார்ப்போம்.

வெங்காயம்

வெங்காயம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிட உடலில் நோய் உண்டாக்கும் கிருமிகள் வரவிடாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவு வெங்காயம்.

நிலவேம்பு

நிலவேம்பு மூலிகைக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. சமீபத்திய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் சிறந்த மருந்தாகும். நிலவேம்பு இலையை நன்றாக பசை போல் அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர வைரஸ் காய்ச்சல் குணமாகும்.

இஞ்சி

இஞ்சி நம் உடலில் நோய்எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. காலையில் இஞ்சி சேர்த்து டீ சாப்பிட்டால் புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. இஞ்சியை காயவைத்து பதப்படுத்தப்பட்டதை சுக்கு என்றழைக்கிறோம். சித்தமருத்துவத்தில் சுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

பூண்டு

பூண்டு நம் சமையலில் நாள்தோறும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு திறன் அதிகளவு உள்ள பூண்டு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இரத்தக்குழாயில் படியும் கொழுப்பை கரைக்கிறது.

மஞ்சள்

மஞ்சளில் பலவகைகள் உண்டு அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. மஞ்சள் இருந்தால் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறுவார்கள் அதற்கு ஏற்றார் போல் மஞ்சள் சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி அதனாலயே வீட்டை சுற்றி மஞ்சள் கலந்த தண்ணீரை தெளிப்பார்கள் இதனால் நோய் உண்டாக்கும் கிருமிகள் வராமல் தடுக்கிறது.

பாகற்காய்

பாகற்காயில் வைட்டமின் சி அதிகளவு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு நோய்களை வரவிடாமல் தடுக்கிறது. இது புற்றுநோயை உருவாக்கும் அணுக்களை அழிக்கிறது.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது மேலும் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் என்றும் இளமையாக இருக்க உதவுகிறது.

ஆரஞ்சுப்பழம்

எந்த நோய்த்தாக்கத்திலும் சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சுப்பழம். ஆரஞ்சுப்பழச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அதனாலேயே உடல் நிலை பாதிக்கப்படும் நேரத்தில் அதிகளவு ஆரஞ்சுப்பழச்சாறு எடுத்துக்கொள்கிறோம்.

ஆரை கீரை

அரைக்கீரை பொடியை அரைத்தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து தினமும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பிரண்டை

பிரண்டையில் வைட்டமின் ‘சி’ உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. அடிக்கடி பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டு வரலாம்.

வேப்பிலை

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது. வேம்பு கற்பம் சாப்பிட்டுவர எந்த நோயும் உடலை நெருங்காது.

பசலைக்கீரை

பசலைக்கீரை உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். பசலைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களும் அதிகளவு உள்ளதால் வாரம் ஒருமுறை சாப்பிட்டு வரலாம்.

பச்சைப்பயறு

முளைகட்டிய பச்சைப்பயர் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

வெள்ளரி விதை

வெள்ளரி விதை கல்லடைப்பு மற்றும் நீர் சம்பந்தமான நோய்களை நீக்குவதுடன் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

தண்டுக்கீரை

தண்டுக்கீரை இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

இளநீர்

இயற்கை பானமான இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தருகிறது.

எள்

எள்ளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு காணப்படுகிறது. மேலும் உடலுக்கு தேவையான வைட்டமிகள் உள்ளது. இதில் ஆலியிக் அமிலம் உள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

குங்குமப்பூ

குங்குமப்பூ உடல் சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்கிறது. குங்குமப்பூ இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

முந்திரி

அதிக சுவையுடைய முந்திரிப்பருப்பு அதிகளவு நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. வறுத்த முந்திரிப்பருப்புடன் சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்ட ஆண்மை குறைவை நீக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!