உடல் நலம்

ஆணுறுப்பு பலமடைய சாப்பிட வேண்டிய உணவு முறைகள்

இன்றைய ஆண்களின் பிரச்சினைகளில் அதிகமாக காணப்படுவது ஆண்மை மற்றும் ஆணுறுப்பு சார்ந்த பிரச்சினைகள் தான். ஆணுறுப்புக்கு சரியான நிலைப்புத்தன்மை, விறைப்புத்தன்மை தேவை. இன்றைய உணவு பழக்கவழக்கங்களும், மது மற்றும் புகை பழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

ஆண்மைக்குறைவு மற்றும் ஆணுறுப்பு சார்த்த பிரச்சனைகளை வரும்போது மன அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு நோய் வந்துவிட்டாலும் ஆண்மை சார்ந்த பிரச்சினைகள் வர தொடங்கிவிடுகிறது. நல்ல உணவுகள் எடுத்துகொள்ளவது மூலம் நல்ல பலனை பெறலாம்.

வேர்க்கடலை

தினமும் 20 வேர்க்கடலையை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும், தேக பெருக்கத்திற்கு உதவுகிறது.

பேரிச்சம் காய்

பேரிச்சம் காயுடன் சிறிது வெள்ளை மிளகு, பெருங்காயம் இவற்றை அரிசியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு வர ஆணுறுப்பு வலுவடையும்.

முருங்கை கீரை

முருங்கை கீரை ரசம் வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆணுறுப்பு நல்ல எழுச்சி பெறும்.

பப்பாளிக்காய்

பப்பாளி காயை சமைத்து உண்ண நரம்புகளை பலமடையும் ஆணுறுப்பு நல்ல எழுச்சி அடையும்.

வாழைப்பூ

வாழைப்பூ சூப் ஆணுறுப்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வாரம் இருமுறையாவது வாழைப்பூ சூப் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

சாதிக்காய்

சாதிக்காயை நெய் விட்டு நன்றாக வதக்கி பிறகு பொடியாக்கி தினமும் 1/2 தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆணுறுப்பு நீட்சி தன்மை அதிகரிக்கும்.

கிழங்கு வகைகள்

உருளை கிழங்கு, பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, அமுக்கிரா கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு இது போன்ற கிழங்கு வகைகளை சாப்பிடுவதன் மூலம் ஆணுறுப்பு சார்ந்த பிரச்னைகள் தீரும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு

உலர்ந்த தண்ணீர் விட்டான் கிழங்கை இடித்து பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர ஆணுறுப்பு நல்ல எழுச்சி பெறும்.

பருப்பு வகைகள்

காராமணி, கொண்டைக்கடலை, மொச்சை கொட்டை, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு இதனை தினமும் சிறிதளவு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!