உடல் நலம்
மூல நோய்க்கான உணவு முறைகள்
மூல நோய் உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியமானது. எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக காரம், புளி, உப்பு, மசாலாப் பொருட்களை குறைக்க வேண்டும்.
மூல நோய்க்கான உணவு முறைகள்
- கீரை வகைகளில் பாலக்கீரை, வெந்தயக்கீரை, தாளிக்கீரை காய்கறிகளில் கருணைக்கிழங்கு, சுண்டக்காய், கோவைக்காய், பாகல்காய் ஆகியவை மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது.
- இரவில் ஒரு டம்ளர் பாலில் 3 பேரீச்சம்பழங்களை போட்டு கலந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
- தேங்காய் பால், வெந்தயக்கஞ்சி வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.
- இரத்த மூலம் உள்ளவர்கள் பிரண்டை துளிர்களை நெய் விட்டு வதக்கி நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் இருவேளை சாப்பிட குணமாகும்.
- பிரண்டை துவையல் செய்து சாப்பிட மூலம் குணமாகும்.
- கருணைக்கிழங்கு மூல நோய்க்கு சிறந்த உணவாகும்.
- வாழைப்பூவைப் பொறியலாகவும், அல்லது துவரம்பருப்புடன் கூட்டு செய்து சாப்பிட இரத்தமூலம் குணமாகும்.
சித்த மருத்துவம்
கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம், நத்தை பற்பம், ரசகந்தி மெழுகு, வெள்ளி பற்பம், அமிர்த வெண்ணெய், மூல குடாரத் தைலம் ஆகிய சிறந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளது. இவைகளை ஒரு அனுப்பமுள்ள சித்த மருத்துவர் மேற்பார்வையில் சாப்பிட்டால் அனைத்து வகையான மூல நோய்களும் குணப்படுத்தலாம்.