உணவே மருந்து

பிரண்டை துவையல் செய்முறை

தேவையானவை

  • பிரண்டை
  • நல்லெண்ணைய்
  • மிளகாய்
  • வெங்காயம்
  • தக்காளி
  • பூண்டு
  • உப்பு

செய்முறை

பிரண்டையின் துளிர் பகுதிகள் முதல் மூன்று கணுக்களுடன் எடுத்து கணுவை நீக்கி சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் சட்டியை வைத்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு நல்லெண்ணெய் ஊற்றி தக்காளி, வெங்காயம,; பூண்டு, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பிறகு வதக்கி வைத்த பிரண்டையுடன் சேர்த்து அரைக்கவும்.

சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மருத்துவ பயன்கள்

  • குடற் பூச்சிகளை நீக்கி, குடற் புண்ணை குணமாக்கும்.
  • மலச்சிக்கலை போக்கும்.
  • மூட்டு வலிகளுக்கும், பக்க வாத நோய்களுக்கும் உணவாகவும் பயன்படுகிறது.
  • பிரண்டைத் துவையல் செறியாமையை நீக்கி பசியைத்தூண்டும்.
  • குழந்தைகளும், பெரியவர்களும் உணவில் சேர்த்துக் கொள்வதால் எலும்புகளும், நரம்புகளும் பலப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!