தூதுவேளை மருத்துவ பயன்கள்
சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும் ஊதாநிறப் பூக்களையும் உருண்டையான பச்சை நிறக் காய்களையும் சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி. தூதுவளை, தூதுளம், தூதுளை என்றும் குறிப்பிடப் பெரும். தமிழமெங்கும் தன்னிச்சையாய் வளர்கிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதுமுண்டு. வேர் முதல் பழம் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை. இதன் பயனைக் கீழ்க்கண்ட வள்ளலார் வாக்கால் அறியலாம்.
காதுமந்தங் காதெழுச்சி காசந் தினவுமத
மோதுமந்த முத்தோஷ முட்சூலை- தாதுநட்ட
மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர்
தூ துளைப் பத்திரியைத் துய்த்து
தூதுவேளை, கண்டங்கத்தரி, பற்பாடகம் விஷ்ணுகாந்தி வகைக்கு 1 பிடி 1 லிட்டர் நீரில் போட்டு 8 இல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளை குடிநீர்) 1 மணிக்கு 1 முறை 5 மி லி முதல் 10 மி லி வரை கொடுத்து வரத் கப வாதச் சுரம் (நிமோனியா ) சன்னிவாதச் சுரம் (டைபாய்டு) குறைவும்.இலையை நெய்யில் வதக்கி துவையலாகவே குழம்பாகக் கடைந்தோ சாப்பிடக்கபக் கட்டு நீங்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.
ஆஸ்துமா மூச்சுத்திணறலில் பழத்தூளைப் புகைப்பிடிக்கச் சளி இளகி குணப்படும்.
நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி 1 மண்டலம் (45 நாள்கள் ) பருக உடல் பலம், முகவசீகரம் அழகும் பெறலாம்.
இலைச்சாற்றை சமஅளவு நெய்யில் ககாய்ச்சிக் காலை மாலை 1 தேக்கரண்டிச் சாப்பிட்டு வர என்புருக்கிக் காசம், மார்புச்சளி நீங்கும்.
காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம்,இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.
சமூலத்தை ( வேர்,இலை, பூ, காய் ) 50 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு 4 லில் ஒன்றாகக் காய்ச்சி காலை, மாலை பருகி வர இரைப்பு, சுவாசகசச் சளி இருமல் ஆகியவை தீரும்.
இலையை நெய்யில் வதக்கி துவையலாகவே குழம்பாகக் கடைந்தோ சாப்பிடக்கபக் கட்டு நீங்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.