உணவே மருந்து
அகத்திக்கீரை சூப்
அகத்திக்கீரை சூப் நினைவாற்றலை அதிகரிக்கிறது, நீரடைப்பு குணமாக்குகிறது மேலும் உடலை குளிர்ச்சியாக்கி கண்பார்வையை தெளிவு பெற செய்கிறது.
தேவையானவை
- அகத்திக்கீரை – 1 கட்டு
- பூண்டு பல் -7
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- தக்காளி – 1
- மஞ்சள் தூள்
- மிளகுத்தூள்
- சீரகத்தூள்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் சின்ன வெங்காயம், பூண்டு பல், சீரகத்தூள், மிளகுத்தூள், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் அகத்திக்கீரையை சேர்த்து 10 நிமிடம் கொதித்தவுடன் உப்பு சேர்த்து இறக்கவும்.
பயன்கள்
- நீரடைப்பு – பித்த மயக்கம் குணமாகும்.
- உடல் உஷ்ணம் குறையும்.
- கண்கள் குளிர்ச்சியாகும், பார்வை தெளிவாகும்.
- நினைவு திறனை அதிகரிக்கும்.