உடல் நலம்
கண் கட்டி குணமாக
கண் கட்டி என்பது கண்ணிமைகளிலே, நுண்ணிய விஷக் கிருமிகளால் ஏற்படும் சிறுகட்டிகளே ஆகும். இதனால் நமைச்சலும் எரிச்சலும் வலியும் இருக்கும்.
கண் கட்டி எதனால் வருகிறது
தேகாரோக்கியச் சீர்குலைவு அடைந்தவர்களிடமும் பார்வை மங்கல் அடைந்தவர்களிடமும் நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களிடமும் இந்த நோய் சாதாரணமாக ஏற்படலாம்.
கண் கட்டி குணமாக மருத்துவம்
- திருநீற்றுப் பச்சையிலைச் சாற்றில் சங்கை நன்றாக உறைத்துப் பூசி வர கண்கட்டி குணமாகும்.
- கறிவேப்பிலைச் சாற்றில் சங்கை உறைத்துப் பூச கண்கட்டி குணமாகும்.
- சிறுகீரை வேர், பொன்னாங்கண்ணி வேர், மயில் துத்தம், புளியம்பூ, திப்பிலி ஆகியவற்றை ஒன்று சேர்த்து எலுமிச்சம்பழச் சாற்றில் மைபோல் அரைத்து பென்சில் மாதிரி நீண்ட மாத்திரை செய்து உலர்த்திப் பத்திரப்படுத்தி கொள்ளவும். காலை, மாலை எலுமிச்சம்பழச் சாற்றில் உறைத்துக் கட்டியில் தடவி வர குணமாகும்.