முகப்பரு வராமல் தடுக்க
முகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் பசை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் முகத்தில் உள்ள மயிர்கால்களை அடைத்து கொண்டு கழிவு பொருள் வெளியேறுவது தடை படுகிறது. இதனால் முகப்பரு உண்டாகிறது.
முகத்தை சுத்தமா வைத்துக்கொள்ள காலை, மாலை வேளைகளில் குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினாலே போதும். வெந்நீரும் சோப்பும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் முகம் உலர்ந்து சுருக்கம் தோன்ற வழிவகுக்கும்.
உணவு முறைகள்
உணவில் பச்சை காய்கறிகள், பால், தயிர், மோர் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு கீரை வகை அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க கீரை உதவுகிறது.
முகப்பருவினால் ஏற்பட்ட தழும்பு நீங்க
சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து காலை, மாலை இரு வேளை முகத்தில் தடவி 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.