சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் தனது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க மருத்துவ முறையை தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள்.
பண்டைக் காலத்திலே வாழ்ந்த அறிஞர்களாகிய சித்தர்களால் கண்டறிந்து கையாண்ட முறை சித்த வைத்தியம். சித்த வைத்திய முறையால் மக்கள் நோயின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர்.
சித்த மருத்துவம் ஒரு தெய்வீக மருத்துவம். பச்சிலை – தாவரம் – இயற்கை மருந்துகளால் செய்யப்பட்ட மருந்துகள் பிணிகளுக்கு நிரந்தர நிவாரணம் தரக் கூடியது.
மறுப்பது உடல்நோய் மருந்தெனலாகும்
மறுப்பதுளநோய் மருந்தெனல் சாலும்
மறுப்பது இனி நோய்வராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே
– திருமூலர் எண்ணாயிரம்
அதாவது சா/ மரணம் வராமல் தடுப்பதே மருந்து அல்லது மருத்துவமாகும். மரணம் வராமல் தடுத்தல் என்று கூறும்போது, இடையில் ஏற்படும் மரணத்தைத் தடுப்பதா அல்லது ஒருவரின் ஆயுள் முடியும்போது ஏற்படும் சாவை தடுப்பதா என்ற கேள்வி எழுகிறதல்லவா? சித்த மருத்துவப்படி ஒருவரின் பூரண ஆயுட்கலாம் நூறு ஆண்டுகளாம். எனவே, இங்கு இரண்டு விதமாகவும் ஏற்படும் மரணத்தை தடுப்பது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
அக்காலத்தில் சித்தர்கள் காய கல்பம் என்ற மருந்தை தயார் செய்து அதனை உண்டு பல ஆண்டுகள் நரை மூப்பு மரணம் வராது வாழ்ந்து வந்தார்கள்.
சித்த மருந்துகள் முழுமையாகப் பச்சிலை தாவர மூலிகைகள் – பால் – நெய் – தேன் – எண்ணெய் வகைகளையும் – உலோகங்களும் – ரச வர்க்கங்களும் சேர்த்து செய்யப்படும் மருந்துகளான செந்தூரம் – சுண்ணம் – திராவகம் – மருந்துகளான வடிவில் கொடுத்து வியாதிகளை குணப்படுத்தப்பட்டு வருகிறது.
சித்த மருந்துகள் மக்களுக்கு தீராத கொடிய நோய்களிடமிருந்து நல்ல சுகமடைய 1 மண்டலம் – 2 மண்டலம் என சாப்பிட்டு வர கண்டிப்பாக நோய்கள் முழுமையாக குணமடையும்.