சிறுநீரக கோளாறுகளுக்கு சித்த மருத்துவ முறைகள்
சிறுநீரக கோளாறுகளுக்கு சித்த மருத்துவத்தில் பாதுகாப்பான சிகிச்சை முறைகள் நிறைய உண்டு.
சிறுநீர் எரிச்சல் மற்றும் வலிக்கு
கடுக்காயை பொடி செய்து காலை, மாலை தேக்கரண்டி தேனிலோ அல்லது கசாயத்தையோ உபயோகித்தால் சிறுநீரகத் தொற்றுகள் நீங்கி சிறுநீர் உபாதை சுத்தமாகும். இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி எரிச்சல் நிற்கும்.
முற்றிய சந்தனக் கட்டையை நீர் விட்டு உரைத்துச் சேகரித்த குழம்பை வெயிலில் காயவைத்து அதைப் பொடியாக்கிக் காலை, மாலை 1 டீஸ்பூன் சாப்பிட்டாலும் மேற்சொன்ன குறைகள் நீங்கும். சந்தனக்கட்டை கிடைக்காதவர்கள் முதல் தரமான சந்தன அத்தரை 5 சொட்டு இரு நேரமும் நீரில் கலந்தும் குடிக்கலாம்.
எல்லாவகை சிறுநீரக கோளாறுகளுக்கு
விழுதாக அரைத்து உலர்த்திய சந்தனப் பொடி, வால் மிளகு, அதிமதுரம் இம்மூன்றில் ஒவ்வொன்றிலும் 50 கிராம், சுக்கு 1 துண்டு எடுத்து லேசாக இடித்து 1/2 லிட்டர் நீர் வீட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்ற வைத்து இதை மூன்று சம பாகமாக பங்கிட்டுக் காலை மதியம் மாலை குடித்து வர சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து போதல்
யானை நெருஞ்சில் முள் 50 கிராம், காசினி விதை 50 கிராம், வெள்ளரி விதை 50 கிராம், சோம்பு 50 கிராம் இவைகளை 1 டம்ளர் வாழைக்கிழங்கு சாறு விட்டு இடித்து அந்த விழுதில் 1/2 லிட்டர் நீர் ஊற்றிக் காய்ச்சி 100 மில்லியாக வற்றவைத்து வடித்து அக்கஷாயத்தைக் காலையில் குடித்து வர சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீரகப் புண், இரத்தம் கலந்த சிறுநீரக கோளாறுகளுக்கு இவைகள் குணமாகும்.