மூலிகைகள்
சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுபீளை
சிறுபீளை மாற்றடுக்கில் அமைந்த சிறிய இலைகளையும் இலைக்கோணங்களில் வெண்மையான மலர்க்கதிர்களையும் உடைய நேராக வளரும் சிறுசெடி பொங்கல் பூ, சிறுபீளை என்றழைப்பது உண்டு. தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கிறது. செடி முழுவதும் மருத்துவ பயனுடையது.
நீரடைப்புக் கல்லடைப்பு நீங்காக் குடற்சூளை
போரடரி ரத்தகணம் போக்குங்காண் – வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை
யாமிதுகற் பேதி யறி
குணம்
சிறுபீளைச் செடிக்கு தேகம் வெளிறல், சிறுநீர் கடுப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.
பயன்கள்
- 20 கிராம் வேரைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 2 வேளை கொடுத்து வர நீர்க்கட்டை உடைக்கும்.
- சிறுபீளை செடி 20 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 100மிலி யாக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வரச் சிறுநீராக கற்களை கரைக்கும்.
- சிறுபீளை இலைகளை சாறு எடுத்து 10 மிலி அளவு தினமும் இருவேளை சாப்பிட மாதவிடாய் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.
- சிறுபீளைச் சாறு உள்ளுறுப்புகளில் ஏற்படும் அலர்ஜியை குணமாக்கும்.
- சிறுபீளை தேகம் வெளிறலை தடுக்கும், கண்ணெரிச்சலை போக்கும்.