சித்த மருத்துவம்லேகியம்
வறட்டு, தொடர் இருமலுக்கு லேகியம்
வறட்டு இருமல் வரக்காரணம் தூசி, புகை, ஆஸ்த்மா, புகைபிடித்தல் போன்றவையாகும். வறட்டு இருமலின் போது சளி வெளியேறுவதில்லை. சில மருந்துகளின் பக்க விளைவினால் கூட வறட்டு இருமல் ஏற்படலாம்.இதை மிக சுலபமாக சரி செய்யலாம் அதற்கான மருந்து செய்முறைகளை பார்ப்போம்.
செய்முறை
மிளகு 1 பலம் (35கிராம்) திப்பிலி 1 பலம் (35 கிராம்) இரண்டையும் சூரணித்து(இடித்து பொடி செய்து கொள்ளவும்) இரண்டு பலம் (70 கிராம்) பசு வெண்ணையை ஒரு சட்டியிலிட்டு அடுப்பேற்றி வெண்ணெய் உருகிய உடன் மேற்கண்ட சூரணத்தையும் 2 பலம் (70 கிராம் ) சீன கற்கண்டையும் போட்டு சிவந்து வருமளவுக்கு கிளறி லேகியமாக்கி வைத்துக் கொள்ளவும்.
உபயோகம்
காலை – மாலை அரை நெல்லிக்காய் அளவு வீதம் சாப்பிட்டு வர வறட்டு இருமல், கோழையோடு(சளி) வுடன் கூடிய தொடர் இருமல், இவைகளை குணமாக்கும்.