சித்த மருத்துவம்
இதயம், மூளைக்கு பலத்தை கொடுக்கும் செம்பருத்தி குளிர்பானம் தயாரிக்கும் முறை
இதயம் மூளைக்கு பலத்தை கொடுக்கும் செம்பருத்தி குளிர்பானம் தயாரிக்கும் முறை.
தேவையானவை
செய்முறை
10 செம்பருத்தி பூக்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வைத்து தண்ணீரை சூடாக்கி செம்பருத்தி பூக்களை போட்டு கொதிக்க வைத்து கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்போது இறக்கி வைத்துவிடவேண்டும். பிறகு நன்கு பழுத்த எலுமிச்சை பழத்தை பாதி அளவு பிழிந்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து சிவப்பாக மாறிவிடும்.பிறகு வடிகட்டி சிறிது வெல்லம் சேர்த்து குளிர்ச்சியாக்கி சாப்பிடவும்.
சாப்பிடும் முறை
காலை வெறும் வயிற்றில் 100மிலி அளவு. சாப்பாட்டிற்கு பிறகு ஒரு மணிநேரம் கழித்து 100மிலி அளவு சாப்பிடவும்.
மருத்துவ பயன்கள்
- மூளைக்கு சிறந்த மருந்து.
- இதயம் பலமடையும் – மார்பு வலி தீரும்.
- கருப்பை நோய்களுக்கு சிறந்தது.
- இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- உடலை குளிர்ச்சியாக்கும் கண் எரிச்சலுக்கு மிகவும் சிறந்தது.
- சிறு நீர் எரிச்சல் நீங்கும்.